Jul 11, 2011

கருவாட்டுப் பொய்யர் கருணாநிதி!


kvp06 kvp08
ஓர் ஆங்கில நாளிதழ் (Deccan Chronicle – 13.05. 2010) வெளியிட்டிருந்த கலைஞர் கருணாநிதியுடனான நேர்காணலில் ஒரு வினா:
DC: Will the Congress remain your partner in the 2011 polls too, since some media reports spoke about the Congress’ big-brotherly attitude in UPA-II. Also, there were some rumblings within your party that the Centre chose to deport Tiger chief Prabhakaran’s mother Parvathi Ammal without consulting you…
கலைஞரின் மறுமொழி:


MK: Your question seems motivated, but I will answer it. All this is just imagination as there is no big-brotherly arrogance in the Congress attitude towards us. Even during my recent trip to Delhi, Sonia Gandhi and Manmohan Singh had received me with much affection. The ties between the two parties are as strong as ever.
We will fight the 2011 (state) elections together. None in the DMK had complained that the Centre took the decision on Prabhakaran’s mother unilaterally; the truth’s that it was she who failed to inform us. You are deliberately twisting the facts.


தமிழில்:

(மாலை மலர் – 13.05.2010)
கே:- இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசிடம் ஒரு கர்வமும் பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி இருக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் உறவு எப்படி இருக்கிறது? 2011 தேர்தலில் இந்த உறவு நீடிக்குமா?
ப:- இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது. இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்த போது கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. 2011 தேர்தலிலும் இந்த உறவு நல்லவிதமாக நீடிக்கும்.

(விடுதலை – 13.05.2010)
கேள்வி: அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது மத்திய அரசுக் காலத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய அண்ணன் போல நடந்து கொள்வதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவிப்பதால், 2011 தேர்தல்களிலும் காங்கிரஸ் உங்கள் கூட்டணியிலேயே இருக்குமா? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, உங்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது என்று சில பேச்சு உங்கள் கட்சிக்குள்ளேயே அடிபடுகிறதே . . .
கலைஞர்: உங்கள் கேள்வியில் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது; என்றாலும் அதற்கு நான் பதில் சொல்கிறேன். எங்களைப் பற்றி பெரிய அண்ணனைப் போல காங்கிரஸ் கட்சி ஆணவத்துடன் நடந்து கொள்வதாகக் கூறப்படுவது வெறும் கற்பனையே. அண்மையில் நான் டில்லி சென்றிருந்தபோது கூட, சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் என்னை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். இரு கட்சிக்கும் இடையே இருக்கும் உறவு எப்போதும் போல இப்-போதும் பலமாகவே இருக்கிறது. 2011 சட்டப் பேரவைத் தேர்தலை நாங்கள் இரு கட்சிகளும் சேர்ந்தே போட்டியிடுவோம். பிரபாகரனின் தாயார் விவகாரத்தில் மத்திய அரசு யதேச்சதிகாரமாக முடிவெடுத்தது என்று தி.மு.கழகத்தில் எவரும் குறை கூறவில்லை. உண்மை என்னவென்றால் தான் வருவதைப் பற்றி அந்த அம்மையார் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்பதுதான். உண்மைகளை நீங்கள் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறீர்கள்.


  • None in the DMK had complained that the Centre took the decision on Prabhakaran’s mother unilaterally. – Deccan Chronicle

  • பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. – மாலைமலர்

  • பிரபாகரனின் தாயார் விவகாரத்தில் மத்திய அரசு யதேச்சதிகாரமாக முடிவெடுத்தது என்று தி.மு.கழகத்தில் எவரும் குறை கூறவில்லை. – விடுதலை கலைஞர் சொல்வது உண்மையா? `பார்வதி அம்மையார் விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தைக் கேளாமல் மைய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது’ என்று தி.மு.க.வில் இருந்து யாரும் குறை கூறவில்லையா? குற்றம் சாட்டவில்லையா?
    சில செய்திகள் கீழே:
    பார்வதி அம்மாள் மிகவும் வயதானவர் என்பது மட்டுமின்றி வாத நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் 6 மாதம் தங்கி சிகிச்சை பெறவே வந்துள்ளார். இந்த தகவல்கள் அனைத்தையும் தமிழக அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
    இப்படிப்பட்ட நிலையில், இப்போதுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு, மாநில அரசோடு கலந்து பேசி மறுபரிசீலனை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்தியாவில் வந்து சிகிச்சை செய்து கொள்ள ஒருவருக்கு விசா வழங்கிவிட்டு, பின்னர் அவரை தரை இறங்க விடாமல் திருப்பி அனுப்பியது ஏன்? இதுபற்றி மாநில அரசிடம் ஏன் கலந்தாலோசிக்கவில்லை? இது குறித்து மத்திய அரசு விளக்கம் தருமா? – (தினத்தந்தி – 20.04.2010)
    நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்துக் கலைஞருக்கு ஐயம் இருப்பதால் (`ஒரு காலம் இருந்தது. கிராமப்புறங்களிலே ஒரு செய்தியைப் பத்திரிகைகளிலே படித்துவிட்டுச் சொன்னால், அப்பொழுதெல்லாம் “அதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்பார்கள். “பத்திரிகைகளிலே வந்திருக்கிறது” என்று சொன்னால், “அப்படியா! பத்திரிகைகளிலேயே வந்துவிட்டதா?” என்று அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் வரும். இந்தக் காலத்தில் “பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன” என்று சொன்னால், “பத்திரிகைகளில்தானே செய்தி வந்திருக்கிறது” என்று சொல்கின்ற அளவிற்கு பத்திரிகைச் செய்திகளாகிவிட்ட இந்தக் காலத்தில் பார்வதி அம்மையாருடைய திட்டவட்டமான பதில் வரும்வரையில், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் இதனை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ – தினத்தந்தி – மே 12) அவரின் நம்பிக்கைக்கு உரிய `திராவிட பாரம்பரிய’ நாளிதழ்களிலிருந்து செய்திகள் இங்கு:
    விடுதலை (20.04.2010)
    kvp04
    தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காதது ஏன்? பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியது சரியா?
    மக்களவையில் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி
    புதுடில்லி, ஏப். 20 – மக்களவையில் நேற்று காலை தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் ஒரு முக்கிய நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
    பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெற வருகை தந்த போது அவரை தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பியது ஏன்? என்று வினா எழுப்பிய டி.ஆர்.பாலு, திருமதி பார்வதி அம்மாளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் எழுதியது ஜெயலலிதா அரசுதான் என்றும் குறிப்பிட்டார்.
    மக்களவையில் அவர் எழுப்பிய முக்கிய பிரச்-சினையின் மீது பேசியதாவது:
    மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, மிக முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து இந்த அவையின் கவனத்தையும், மத்திய அரசின் கவனத்தையும் ஈர்ப்பதற்காகப் பேச விழைகிறேன்.
    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு கோலாலம்பூரிலிருந்து விமானத்தில் வந்த பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் அவர்களை இந்திய அரசின் அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இறங்க விடாமல் திரும்பவும் கோலாலம்பூருக்கே அனுப்பி வைத்துள்ளனர்.
    திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் மிகவும் வயதானவர் என்பது மட்டுமன்றி வாதநோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக ஆறுமாதம் சென்னையில் உள்ள மருத்துவமனையில தங்கி சிகிச்சை பெறவே வந்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் மத்திய அரசு மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை.
    சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவேண்டிய மாநில அரசோடு இந்தப் பிரச்சினை குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் 2003 வரை தமிழகத்தில் வசித்தார். கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை இலங்கையில் வசித்தார்.
    இலங்கையில் வாழ்ந்த அவர் சமீபத்தில் கோலாலம்பூரில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார். எனவே அவர் மீது எந்தக் குற்றப் பின்னணியும் இருப்பதாக இந்திய அரசோ, இலங்கை அரசோ கருதமுடியாது.
    கடந்த 2003 ஆம் ஆண்டு திருமதி பார்வதி அம்மாள் இலங்கை சென்ற பின் அவர் மீண்டும் இந்தியாவிற்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசிற்கு அன்றைய ஜெயலலிதா அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
    இப்படிப்பட்ட நிலையில் இப்போது உள்ள சூழ்நிலையில் மத்திய அரசு மாநில அரசோடு கலந்து பேசி மறு பரிசீலனை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
    இந்தியாவில் வந்து மருத்துவம் செய்து கொள்ள ஒருவருக்கு விசா வழங்கிவிட்டு அவரை இந்தியாவில் இறங்கவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது ஏன்? இது பற்றி மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. இது குறித்து மத்திய அரசு விளக்கம் தருமா?
    தினகரன் (20.04.2010)
    kvp05


  • முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக்கூட நினைவுகூர்ந்து பேசும் கலைஞர் மூன்று கிழமைக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் பாலு பேசியதை `மறந்து’ பேசுகிறாரே, எப்படி?
    மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணி `மறந்து’விட்டாரோ?
                                                                                       நன்றி :அ.நம்பி(நனவுகள்)

    No comments:

    Post a Comment