Jul 23, 2011

சிலிர்க்க வைக்கும் நடனங்கள்

     நடனம் என்பது பொதுவாகத் "தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம்" என்று மட்டுமே நாம் இது நாள் வரை நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.ஆனால் இங்கு காணப்படும் நடனங்கள்  சற்றே வித்யாசமானது.
     இதை பொத்தம் பொதுவாக குரூப் டான்ஸ் என்று சொல்லிவிட முடியாது.இதை ஒரு TEAM WORK என்று மட்டுமே சொல்ல முடியும்(பார்த்தால் உங்களுக்கே புரியும்).

என்னை  மிரள வைத்த மிரட்டிய நடனம்


இதில் வரும் இசை இவர்கள் ந ஏற்படும் காலடி ஓசைகளே.ஆனால் அனைவரின் காலடி சப்தங்களும் ஒன்று போலவே ஒலிக்கும்.உற்று நோக்கினால் தெரியும்.



                                                 
இரண்டும் ஒன்று போலவே இருந்தாலும் வேறு வேறு நடனங்களே.

      

மற்றொரு அசர அதிர வைக்கும் நடனம்

     இது கொரியா நாட்டு நடனம்.SAMSUNG நிறுவனத்தின் விளம்பர நடனமாக இருந்தாலும் மேலே காணப்படும் நடனங்களை விட நன்றாகவே இருக்கிறது.
நிச்சயம் இந்த நடனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.
இந்த விடியோவைப் பற்றிய கமெண்ட்ஸ் எப்படின்னு தயவு செய்து கீழே எழுதவும்.
-----------------------------------❊❊❊❊❊நன்றி❊❊❊❊❊-------------------------------------


Jul 11, 2011

கருவாட்டுப் பொய்யர் கருணாநிதி!


kvp06 kvp08
ஓர் ஆங்கில நாளிதழ் (Deccan Chronicle – 13.05. 2010) வெளியிட்டிருந்த கலைஞர் கருணாநிதியுடனான நேர்காணலில் ஒரு வினா:
DC: Will the Congress remain your partner in the 2011 polls too, since some media reports spoke about the Congress’ big-brotherly attitude in UPA-II. Also, there were some rumblings within your party that the Centre chose to deport Tiger chief Prabhakaran’s mother Parvathi Ammal without consulting you…
கலைஞரின் மறுமொழி:


MK: Your question seems motivated, but I will answer it. All this is just imagination as there is no big-brotherly arrogance in the Congress attitude towards us. Even during my recent trip to Delhi, Sonia Gandhi and Manmohan Singh had received me with much affection. The ties between the two parties are as strong as ever.
We will fight the 2011 (state) elections together. None in the DMK had complained that the Centre took the decision on Prabhakaran’s mother unilaterally; the truth’s that it was she who failed to inform us. You are deliberately twisting the facts.


தமிழில்:

(மாலை மலர் – 13.05.2010)
கே:- இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசிடம் ஒரு கர்வமும் பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி இருக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் உறவு எப்படி இருக்கிறது? 2011 தேர்தலில் இந்த உறவு நீடிக்குமா?
ப:- இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது. இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்த போது கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. 2011 தேர்தலிலும் இந்த உறவு நல்லவிதமாக நீடிக்கும்.

(விடுதலை – 13.05.2010)
கேள்வி: அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது மத்திய அரசுக் காலத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய அண்ணன் போல நடந்து கொள்வதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவிப்பதால், 2011 தேர்தல்களிலும் காங்கிரஸ் உங்கள் கூட்டணியிலேயே இருக்குமா? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, உங்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது என்று சில பேச்சு உங்கள் கட்சிக்குள்ளேயே அடிபடுகிறதே . . .
கலைஞர்: உங்கள் கேள்வியில் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது; என்றாலும் அதற்கு நான் பதில் சொல்கிறேன். எங்களைப் பற்றி பெரிய அண்ணனைப் போல காங்கிரஸ் கட்சி ஆணவத்துடன் நடந்து கொள்வதாகக் கூறப்படுவது வெறும் கற்பனையே. அண்மையில் நான் டில்லி சென்றிருந்தபோது கூட, சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் என்னை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். இரு கட்சிக்கும் இடையே இருக்கும் உறவு எப்போதும் போல இப்-போதும் பலமாகவே இருக்கிறது. 2011 சட்டப் பேரவைத் தேர்தலை நாங்கள் இரு கட்சிகளும் சேர்ந்தே போட்டியிடுவோம். பிரபாகரனின் தாயார் விவகாரத்தில் மத்திய அரசு யதேச்சதிகாரமாக முடிவெடுத்தது என்று தி.மு.கழகத்தில் எவரும் குறை கூறவில்லை. உண்மை என்னவென்றால் தான் வருவதைப் பற்றி அந்த அம்மையார் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்பதுதான். உண்மைகளை நீங்கள் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறீர்கள்.


  • None in the DMK had complained that the Centre took the decision on Prabhakaran’s mother unilaterally. – Deccan Chronicle

  • பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. – மாலைமலர்

  • பிரபாகரனின் தாயார் விவகாரத்தில் மத்திய அரசு யதேச்சதிகாரமாக முடிவெடுத்தது என்று தி.மு.கழகத்தில் எவரும் குறை கூறவில்லை. – விடுதலை கலைஞர் சொல்வது உண்மையா? `பார்வதி அம்மையார் விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தைக் கேளாமல் மைய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது’ என்று தி.மு.க.வில் இருந்து யாரும் குறை கூறவில்லையா? குற்றம் சாட்டவில்லையா?
    சில செய்திகள் கீழே:
    பார்வதி அம்மாள் மிகவும் வயதானவர் என்பது மட்டுமின்றி வாத நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் 6 மாதம் தங்கி சிகிச்சை பெறவே வந்துள்ளார். இந்த தகவல்கள் அனைத்தையும் தமிழக அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
    இப்படிப்பட்ட நிலையில், இப்போதுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு, மாநில அரசோடு கலந்து பேசி மறுபரிசீலனை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்தியாவில் வந்து சிகிச்சை செய்து கொள்ள ஒருவருக்கு விசா வழங்கிவிட்டு, பின்னர் அவரை தரை இறங்க விடாமல் திருப்பி அனுப்பியது ஏன்? இதுபற்றி மாநில அரசிடம் ஏன் கலந்தாலோசிக்கவில்லை? இது குறித்து மத்திய அரசு விளக்கம் தருமா? – (தினத்தந்தி – 20.04.2010)
    நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்துக் கலைஞருக்கு ஐயம் இருப்பதால் (`ஒரு காலம் இருந்தது. கிராமப்புறங்களிலே ஒரு செய்தியைப் பத்திரிகைகளிலே படித்துவிட்டுச் சொன்னால், அப்பொழுதெல்லாம் “அதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்பார்கள். “பத்திரிகைகளிலே வந்திருக்கிறது” என்று சொன்னால், “அப்படியா! பத்திரிகைகளிலேயே வந்துவிட்டதா?” என்று அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் வரும். இந்தக் காலத்தில் “பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன” என்று சொன்னால், “பத்திரிகைகளில்தானே செய்தி வந்திருக்கிறது” என்று சொல்கின்ற அளவிற்கு பத்திரிகைச் செய்திகளாகிவிட்ட இந்தக் காலத்தில் பார்வதி அம்மையாருடைய திட்டவட்டமான பதில் வரும்வரையில், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் இதனை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ – தினத்தந்தி – மே 12) அவரின் நம்பிக்கைக்கு உரிய `திராவிட பாரம்பரிய’ நாளிதழ்களிலிருந்து செய்திகள் இங்கு:
    விடுதலை (20.04.2010)
    kvp04
    தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காதது ஏன்? பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியது சரியா?
    மக்களவையில் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி
    புதுடில்லி, ஏப். 20 – மக்களவையில் நேற்று காலை தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் ஒரு முக்கிய நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
    பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெற வருகை தந்த போது அவரை தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பியது ஏன்? என்று வினா எழுப்பிய டி.ஆர்.பாலு, திருமதி பார்வதி அம்மாளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் எழுதியது ஜெயலலிதா அரசுதான் என்றும் குறிப்பிட்டார்.
    மக்களவையில் அவர் எழுப்பிய முக்கிய பிரச்-சினையின் மீது பேசியதாவது:
    மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, மிக முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து இந்த அவையின் கவனத்தையும், மத்திய அரசின் கவனத்தையும் ஈர்ப்பதற்காகப் பேச விழைகிறேன்.
    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு கோலாலம்பூரிலிருந்து விமானத்தில் வந்த பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் அவர்களை இந்திய அரசின் அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இறங்க விடாமல் திரும்பவும் கோலாலம்பூருக்கே அனுப்பி வைத்துள்ளனர்.
    திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் மிகவும் வயதானவர் என்பது மட்டுமன்றி வாதநோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக ஆறுமாதம் சென்னையில் உள்ள மருத்துவமனையில தங்கி சிகிச்சை பெறவே வந்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் மத்திய அரசு மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை.
    சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவேண்டிய மாநில அரசோடு இந்தப் பிரச்சினை குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் 2003 வரை தமிழகத்தில் வசித்தார். கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை இலங்கையில் வசித்தார்.
    இலங்கையில் வாழ்ந்த அவர் சமீபத்தில் கோலாலம்பூரில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார். எனவே அவர் மீது எந்தக் குற்றப் பின்னணியும் இருப்பதாக இந்திய அரசோ, இலங்கை அரசோ கருதமுடியாது.
    கடந்த 2003 ஆம் ஆண்டு திருமதி பார்வதி அம்மாள் இலங்கை சென்ற பின் அவர் மீண்டும் இந்தியாவிற்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசிற்கு அன்றைய ஜெயலலிதா அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
    இப்படிப்பட்ட நிலையில் இப்போது உள்ள சூழ்நிலையில் மத்திய அரசு மாநில அரசோடு கலந்து பேசி மறு பரிசீலனை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
    இந்தியாவில் வந்து மருத்துவம் செய்து கொள்ள ஒருவருக்கு விசா வழங்கிவிட்டு அவரை இந்தியாவில் இறங்கவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது ஏன்? இது பற்றி மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. இது குறித்து மத்திய அரசு விளக்கம் தருமா?
    தினகரன் (20.04.2010)
    kvp05


  • முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக்கூட நினைவுகூர்ந்து பேசும் கலைஞர் மூன்று கிழமைக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் பாலு பேசியதை `மறந்து’ பேசுகிறாரே, எப்படி?
    மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணி `மறந்து’விட்டாரோ?
                                                                                       நன்றி :அ.நம்பி(நனவுகள்)

    Jul 9, 2011

    இந்தியாவிற்கான முதல் பிரவுசர்

         இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஆண்டு ஜூலை மாதம் மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.

         பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. தாஜ் மஹாலின் உருவம் யமுனை ஆற்றில் தெரிவது போன்ற காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த பிரவுசர் தரும் 1500 ற்கும் மேற்பட்ட தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம்.


         இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில்,ஆர்குட், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது.மேலும் ஆர்குட், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் ஒருமுறை sign in செய்து விட்டால் அதன் அப்டேட்ஸ் நமக்கு கிடைத்தவண்ணம் இருக்கும்.ஏதேனும் ஒரு முக்கியமான வேலையே பார்த்துக்கோனு இருக்கும் போதே சைடுபாரில் E-Buddy மூலம் சாட் செய்யலாம். social -networking ற்கு இது ஒரு சிறந்த ப்ரௌசெர் என்றே கூறலாம்.



    Facebook & Twitter sidebar applications helping us to manage our communities from our sidebar even when we are busy in other sites.









         நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் stop-watch,count-down timer,alarm, planner, தரப்பட்டுள்ளன.ஜிமெயில்,யாஹூ போன்ற தளங்களை கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.

    My Computer & Timer sidebar apps.

         இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.நாம் திறக்கும் ஒவ்வொரு தளத்தினையும் ஆராய்ந்து அதன் தரத்தை நம்மிடம் காட்டுகிறது.மேலும் ஒவ்வொரு லிங்கினை ரைட் கிளிக் செய்து அதை ஆன்லைனில் வைரஸ் ஸ்கேன் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

                                            Web Of Trust (WOT) scorecard for every site.

         மேலும் இதன் இன்னொரு சிறந்த வசதி இதனுடனேயே ஒரு word proccessor தரப்பட்டுள்ளது சிறப்பம்சம்.என்னைப்போன்ற பலருக்கு இந்திய மொழியில் டைப் செய்ய இது மிகவும் பயனுடையதாக அமையும்.இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தமிழ் உட்பட 20 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம்.பிரவுசரிலுள்ள எந்தவொரு டெக்ஸ்ட் பாக்ஸ்சிலும் இந்திய மொழியில் டைப் செய்யலாம்.

                                        
     EPIC Write- Inbuilt word proccessor.Even my blog created from here.

          இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் லைவ் TV இயக்கி வீடியோ பார்க்கலாம்.
    India sidebar gives national news,national news,important events in each cities,share market status,music,Live TV,cricket,videos & more

          இவற்றுடன் ஒரு வீடியோ சைட் பார் உள்ளது.எந்த ஒரு தளத்தில் இருக்கும் விடியோவையும் அந்த தளத்தில் தான் பார்க்க வேண்டும் என்பதில்லை.விடியோ உள்ள பேஜ் லோட் செய்யும் போதே உங்களுக்கு PLAY IN SIDEBAR என்ற pop up கிடைக்கும்.அதை கிளிக் செய்து விடியோவை சைடு பாரில் பார்த்துக் கொண்டே மற்ற வேலைகளை கையாளலாம்.
        Video sidebar.Now with youtube plugin to watch all youtube videos from here.

         இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
    நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.
       இதை உடனடியாக டவுன்லோடு செய்யவேண்டுமா.  இங்கு கிளிக் செய்யவும்.


         மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.மேலும் இதிலுள்ள பைல்-பாக்அப்   வசதி நமதுகணினியில் உள்ள பைல்களை நமது GMAIL அக்கவுண்டில் பத்திரமாக பூட்டி வைக்கிறது.

         இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 20 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.


         சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

         இந்தியர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

    Jul 5, 2011

    தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி.......


    கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில்

    >>பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

    *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.



    இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
    இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

    >>பக்கம் 81,82 ல்..............

    *விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

    >>இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................

    * பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பட்மாவத்திக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

    >>பக்கம் 92,93 ல்..............................

    * பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

    இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.

    இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    அதற்கு முதலில் அவரது குடும்பத்தின் உறுப்பினர்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.


    உங்கள் ப்ரௌசரில் ஜூம் வசதி இல்லாவிட்டால் மேலும் தெளிவாக படத்தை பார்க்க இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

    கருணாநிதி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பின்வருமாறு..

    1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
    2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
    3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
    4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
    5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
    6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
    7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
    8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
    9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
    10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
    11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
    12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
    13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
    14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
    15. தயாநிதி மாறன் வீடு
    16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
    17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
    18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
    19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
    20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
    21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
    22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
    23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
    25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
    26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
    27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
    28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
    29. அந்தமான் தீவின் நிலங்கள்
    30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
    31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
    32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
    33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
    34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
    35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
    36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
    37. செல்வம் வீடு
    38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
    39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
    40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
    41. செல்வம் வீடு-பெங்களுர்
    42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
    43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
    44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
    45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
    46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
    47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்(மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை)
    48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
    49 .ADDITIONAL PROPERTIES AFTER செம்மொழி மாநாடு கோவை farm house
    50. BROOKE BOND LAND IN COIMBATORE (RMKV சில்க்ஸ் க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது-எனது கணிப்புப்படி மாத வாடகை சுமார் எட்டு லட்சம் தேறும்)
    51.மன்னிக்கவும் .....எனக்கு கிடைத்த தகவல் இவ்வளவுதான்.

    இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.

    மேலும் இங்கு குறிப்பிடப்பட்டவை அனைத்தும் நிலையான சொத்துக்களே.
    சன் நெட்வொர்க்,கலைஞர் டிவி,CLOUD NINE MOVIES,RED GIANT MOVIES,போன்ற பல தொழில் நிறுவனங்களின் பெயர்கள் சேர்க்கப் பட வில்லை.


    இவை யாவும் கருணாநிதியின் முப்பாட்டனார் சேர்த்து வைத்த சொத்துக்கள் அல்ல.அவர் தாமே மிகவும் முயன்று உழைத்து(!) சம்பத்தித்தவை.

    திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட (மஞ்சள்) துண்டுடன் , சென்னை நகருக்கு (கள்ள) ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

    முதல் மனைவிக்கு மாதம் ஐந்து ருபாய்,
       இரண்டாம் மனைவிக்கு கலைஞர் டிவியில் பங்கு,
              மூன்றாம் மனைவி மூன்றாம் குற்றப் பத்திரிக்கையில் இருக்கக்கூடும்.
                     -நல்ல முன்னேற்றம்..


    வாழ்க தமிழ்நாடு.
             வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள் (அரசியல்) !!!

    --------------------------------------------நன்றி---------------------------------Thanks to hiox.org

    Jul 3, 2011

    சுறுசுறுப்பு டானிக்....

    நடைபாதை. ஓர் இளைஞன். கையில் பாட்டில்.

    “”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான். நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

    சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

    இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

    “”அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?”

    “”சிறையிலே இருந்தேன்!”

    “”ஏன்?”

    “”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!”

    “”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”

    “”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”

    ”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?”

    “”உங்க நம்பிக்கை! நம்பிக்கைதான் வாழ்க்கையின் உந்து சக்தி!”

    நம்பிக்கையோடு நடைபோடக் கற்றுக் கொண்டால் தோல்வியைக் கண்டு துவண்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்படாது.....

    ----------------------------------------நன்றி--------------------------------------------hiox

    Jul 1, 2011

    நூறாவது நாள்

    இன்று எனது பள்ளி வாழ்க்கை நிறைவடைந்து நூறு நாட்கள் ஆகிறது...நூறு நாட்கள் ஓடியதே தெரியவில்லை.... ட்விட்டர்,பேஸ்புக்ஆர்க்குட்,கிரிக்கெட்,பேட்மிட்டேன்னு,ரிசல்ட் என்று பல வகைகளில் 100 பொழுதுகள் உருண்டோடி விட்டன.இன்னும் மிகச்சில நாட்களில்  கல்லூரி துவங்க இருக்கிறது...மீண்டும் அந்த கனா காணும் காலங்கள் வராதா என ஒவ்வொரு நாட்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்.....அந்த ஏக்கத்தின் வழியாக என் இதயத்தில் உதிர்த்த முதல் கவிதை....



    என் பள்ளிப் பருவம்...


    என் பள்ளிப் பருவம்...
    அது ஒரு அழகிய கனாக் காலம்!
    இனி கனவிலும் நிகழாக்காலம்!

     பள்ளி வகுப்பறையும், பச்சை மரங்களும்
    இன்றும் பசுமையான நினைவுகளோடு
    என் நெஞ்சில் புதைந்து கிடக்கின்றன!

     நூறு நாட்கள் கழிந்தும்,
    இன்றும் கண்கள் குளமாகின்றன...
    பள்ளி கட்டிடங்களையும், உடன் படித்த நண்பர்களையும் பார்க்கும் போது.....

     நாங்கள் செங்கோல் ஊன்றிய அரண்மனையாய் பள்ளிக்கூடம்,
    மன்னர்களாய் நாங்கள் !
    மக்களாய் நகைச்சுவை,இரக்கம்,கோபம்,வீரம்,அச்சம்,காதல்,          ஆச்சர்யம்,வெறுப்பு, மனஅமைதி ஆகிய நவரச  உணர்வுகளும்!

    சின்ன சின்ன சேட்டைகள்,
    ஆசிரியரின் கோபங்கள்,
    முட்டிங்கால் தண்டனை,
    மழைக்கால பள்ளி விடுமுறை,
    கோடை விடுமுறை.

    நண்பனின் உணவை பிடுங்கும் மதிய உணவு,
    தென்னம் பட்டையில் கிரிக்கெட்,
    இளம் தேங்காயில்  கால்பந்து..
     
    வெள்ளிக்கிழமை வெள்ளித்திரை!
    சனிக்கிழமை அசத்தப்போவது யாரு!
    ஞாயிறு விளையாட்டு,
    மீண்டு சோர்வோடு திங்கள்கிழமை பள்ளிக்கூடம்....

    தோளில் கைபோட்டுக்கொண்டு கேண்டீன் செல்வது,
    பள்ளி முடிந்த அரை வினாடியில் பள்ளியை  விட்டே ஓடுவது...

     அம்மாவின் பாசம்,
    அப்பாவின் அறிவுரை,
    வீட்டில் உணவு,
    பள்ளியில் உறக்கம்.....

    பரிட்சை நேர பதட்டம்,
    நண்பனின் நலம் விசாரணை வேறு
    பரிட்சைக்குமுன் "படிச்சியா டா?"
    பரிட்சையின் போது "பாசாயிடுவியா டா?" என்று,
    பரிட்சைக்கு முன் கொண்டாட்டம்...பரிட்சையின் போது திண்டாட்டம்...

     தேர்வில்.... அப்பாடா.....பாஸ்!!! - இந்த அளவிடற்கரிய சந்தோசம்!
    அந்த சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தா "இதெல்லாம் ஒரு மார்க்கா"என பெற்றோரின் மிதி..... எல்லாம் நம்ம  தல விதின்னு நினைக்கும் காலம் அது..

    இதுபோல் இன்னும் எத்தனையோ....
    வார்த்தைகளில் அடங்கா சந்தோசங்கள்.....!
    என்ன தவம் செய்தாலும், மீண்டும் கிடைக்காத பேரின்பம் அது!

    அப்பேரின்பம், இன்று 100 நாட்கள் முடிந்தும்
    எழுதப்படாத வரலாறாய், காலம் தீட்டிய ஓவியமாய்,
    "நினைவுகளில்" மட்டுமே!!!!


              நானும் கவிதை என்று தான் ஆரம்பித்தேன்...அது உரைநடை போல ஹைக்கூ போல வளர்ந்து விட்டது...உங்களோட கமென்ட்ஸ   எதிர்நோக்கி எழுதப்பட்டது...உங்கள் கமெண்ட்ஸ் வரவேர்க்கப் படுகின்றன.......உங்கள் கமெண்ட்ஸ  மறக்காமல் கீழே எழுதவும்....நன்றி...