Jul 1, 2011

நூறாவது நாள்

இன்று எனது பள்ளி வாழ்க்கை நிறைவடைந்து நூறு நாட்கள் ஆகிறது...நூறு நாட்கள் ஓடியதே தெரியவில்லை.... ட்விட்டர்,பேஸ்புக்ஆர்க்குட்,கிரிக்கெட்,பேட்மிட்டேன்னு,ரிசல்ட் என்று பல வகைகளில் 100 பொழுதுகள் உருண்டோடி விட்டன.இன்னும் மிகச்சில நாட்களில்  கல்லூரி துவங்க இருக்கிறது...மீண்டும் அந்த கனா காணும் காலங்கள் வராதா என ஒவ்வொரு நாட்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்.....அந்த ஏக்கத்தின் வழியாக என் இதயத்தில் உதிர்த்த முதல் கவிதை....



என் பள்ளிப் பருவம்...


என் பள்ளிப் பருவம்...
அது ஒரு அழகிய கனாக் காலம்!
இனி கனவிலும் நிகழாக்காலம்!

 பள்ளி வகுப்பறையும், பச்சை மரங்களும்
இன்றும் பசுமையான நினைவுகளோடு
என் நெஞ்சில் புதைந்து கிடக்கின்றன!

 நூறு நாட்கள் கழிந்தும்,
இன்றும் கண்கள் குளமாகின்றன...
பள்ளி கட்டிடங்களையும், உடன் படித்த நண்பர்களையும் பார்க்கும் போது.....

 நாங்கள் செங்கோல் ஊன்றிய அரண்மனையாய் பள்ளிக்கூடம்,
மன்னர்களாய் நாங்கள் !
மக்களாய் நகைச்சுவை,இரக்கம்,கோபம்,வீரம்,அச்சம்,காதல்,          ஆச்சர்யம்,வெறுப்பு, மனஅமைதி ஆகிய நவரச  உணர்வுகளும்!

சின்ன சின்ன சேட்டைகள்,
ஆசிரியரின் கோபங்கள்,
முட்டிங்கால் தண்டனை,
மழைக்கால பள்ளி விடுமுறை,
கோடை விடுமுறை.

நண்பனின் உணவை பிடுங்கும் மதிய உணவு,
தென்னம் பட்டையில் கிரிக்கெட்,
இளம் தேங்காயில்  கால்பந்து..
 
வெள்ளிக்கிழமை வெள்ளித்திரை!
சனிக்கிழமை அசத்தப்போவது யாரு!
ஞாயிறு விளையாட்டு,
மீண்டு சோர்வோடு திங்கள்கிழமை பள்ளிக்கூடம்....

தோளில் கைபோட்டுக்கொண்டு கேண்டீன் செல்வது,
பள்ளி முடிந்த அரை வினாடியில் பள்ளியை  விட்டே ஓடுவது...

 அம்மாவின் பாசம்,
அப்பாவின் அறிவுரை,
வீட்டில் உணவு,
பள்ளியில் உறக்கம்.....

பரிட்சை நேர பதட்டம்,
நண்பனின் நலம் விசாரணை வேறு
பரிட்சைக்குமுன் "படிச்சியா டா?"
பரிட்சையின் போது "பாசாயிடுவியா டா?" என்று,
பரிட்சைக்கு முன் கொண்டாட்டம்...பரிட்சையின் போது திண்டாட்டம்...

 தேர்வில்.... அப்பாடா.....பாஸ்!!! - இந்த அளவிடற்கரிய சந்தோசம்!
அந்த சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தா "இதெல்லாம் ஒரு மார்க்கா"என பெற்றோரின் மிதி..... எல்லாம் நம்ம  தல விதின்னு நினைக்கும் காலம் அது..

இதுபோல் இன்னும் எத்தனையோ....
வார்த்தைகளில் அடங்கா சந்தோசங்கள்.....!
என்ன தவம் செய்தாலும், மீண்டும் கிடைக்காத பேரின்பம் அது!

அப்பேரின்பம், இன்று 100 நாட்கள் முடிந்தும்
எழுதப்படாத வரலாறாய், காலம் தீட்டிய ஓவியமாய்,
"நினைவுகளில்" மட்டுமே!!!!


          நானும் கவிதை என்று தான் ஆரம்பித்தேன்...அது உரைநடை போல ஹைக்கூ போல வளர்ந்து விட்டது...உங்களோட கமென்ட்ஸ   எதிர்நோக்கி எழுதப்பட்டது...உங்கள் கமெண்ட்ஸ் வரவேர்க்கப் படுகின்றன.......உங்கள் கமெண்ட்ஸ  மறக்காமல் கீழே எழுதவும்....நன்றி...

No comments:

Post a Comment